“இலகுவான வாழ்க்கைக்காக பிரார்த்திக்காதே.
துன்பங்கள் வரும்போது உறுதியாகச் சந்திக்கும் வல்லமை பெற பிரார்த்தனை செய்.”
*****
“பிறரை வீழ்த்துபவன் உண்மையான வீரன் அல்ல.
உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்.”
*****
“நல்லவராய் இருப்பது நல்லதுதான்.
ஆனால் நல்லது கெட்டது தெரியாத நல்லவராய் இருப்பது ஆபத்தானது.”
*****
“மற்றவர்களின் மனங்களை புரிந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களுக்கும் மனம் என்ற ஒன்று இருப்பதை புரிந்துகொள்ளுங்கள்.”
*****
“இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி.
கண் பார்த்து சிரிப்பவன் காரியவாதி.
கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்.
கொடுக்கும்போது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்.”
*****