“உங்களுக்குள் அழகான மலர்களும் இருக்கின்றன, அழுகிப்போன மீனும் இருக்கின்றது.
மற்றவர்கள், உங்கள் மலர்களின் வாசனைக்காக உங்களைப் பாராட்டவில்லை என்று நீங்கள் வருந்துகிறீர்கள்.
உண்மையில் அழுகிய மீன் வாடை தூக்கலாக இருப்பதால் உங்கள் மலர்களின் வாசனையை யாராலும் நுகர முடியவில்லை.
அதுபோல் உங்கள் நல்ல தன்மைகளைவிட தீய தன்மைகள் தூக்கலாக இருந்தால் பிறர் உங்களிடமிருந்து விலகியே இருப்பார்கள்.”
*****
“சம்பாதிக்க வேண்டியதில் முதன்மையானது ஒழுக்கம்; இரண்டாவது கல்வி; மூன்றாவதுதான் பணம்.”
*****
“நூறு ஆண்டுகள் வாழ,
1. எப்போதும் மகிழ்ச்சியாய் இரு.
2. அளவோடு சாப்பிடு.
3. மனசாட்சிக்கு விரோதமான செயலைச் செய்யாதே.
4. நாள்தோறும் குறித்த நேரத்தில் தூங்கச் செல்.
5. கடன் வாங்காமல் வருமானத்துக்குள் வாழ்க்கையை நடத்து.
6. சம்பாதிக்கும்போதே சேமி.
7. எப்போதும் சுறுசுறுப்புடன் இரு. களைப்பு ஏற்படும்வரை வேலை செய்.
8. ஒரு குறிக்கோளை நோக்கி வாழ்க்கையை நடத்து.”
*****