“அதிகம் பேசுவதைவிட குறைவாக பேசுவது நல்லது.
குறைவாகப் பேசுவதைவிட பேசாமல் இருப்பது நல்லது.
பேசினால் உண்மையையே அதிகம் பேச வேண்டும்.
இந்த உண்மை பேசுவதை அன்பாக பேச வேண்டும்.
இந்த அன்பான வார்த்தைகளில்
தர்மம் உள்ள காரியங்களைப்பற்றியே பேச வேண்டும்.
இதுவே ஒருவனைப் பெரிய மனிதன் ஆக்கும்.”
“உயர்ந்த எண்ணங்களுடனும் அடுத்தவரைப்பற்றிய ஆக்கபூர்வமான சிந்தனைகளுடனும் திகழ்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர்.
எதிர்மறையான சிந்தனை ஏற்படும்போது நம்மையும் அறியாமல் துயரம் நம் தோளில் அமர்ந்துகொள்ளும்.”
“நம் கால்களில் நிற்கவேண்டும் என்பது மிக அவசியம்.
அடுத்தவர் கால்களை வாரிவிடாமல் வாழ்வது என்பது அதைவிட முக்கியம்.”