“உன் வாழ்க்கையில் உனக்கு எதைக் கொடுக்கவேண்டும், வேண்டாம் என்பதை விதி தீர்மானிக்கிறது.
சில அறிவாளிகள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன் விதியை மதியால் வெல்லலாம் என்று.
நீ விதியை வெல்வாய் என்பதுகூட உன் விதியாகத்தான் இருக்குமே தவிர அதற்கு மேலாக எதுவுமே இல்லை.
விதியோடு விளையாட முயற்சி செய்யாதே. தோற்றுப்போவாய். அதனோடு சேர்ந்து செயல்பட முயற்சி செய். உலகம் உன் கையில்.”
*****
“உங்களைத் தவிர வேறு எதுவும் உங்களுக்கு அமைதியைத் தர முடியாது. மற்றவரை அறிந்தவன் புத்திசாலி; தன்னைத்தான் அறிந்தவன் ஞானி.”
*****
“‘திடும்’ எனப் பொங்கிச் செயலாற்றும் கடல் நடுவேதான் அமைதியாகத் தீவுகளும் உள்ளன.
மனிதனும் இதுபோல், வாழ்க்கை போர்க்களமாக இருந்தாலும் வார ஓய்வு நாட்களில் முழு ஓய்வுடன் அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.
ஓய்வு நாளை முழு அமைதியுடன் கழிக்கும்போது கிடைக்கும் சக்தி வாழ்க்கைப் பிரச்சினைகளை சமாளிக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.”
*****