“எளிமையாக இருங்கள்.
எளிமைதான் உண்மையாக வாழக் கற்றுக் கொடுக்கும்.
மாபெரும் கண்டுபிடிப்புகளுக்குத் தேவையான அறிவைத் தரும் சாவி எளிமையில் தான் அடங்கி இருக்கிறது.
நல்லவற்றிற்கு உடனே நம் மனதைத் திறக்கவும், கெட்டதற்கு உடனடியாகவும் நம் மனக்கதவை மூடக்கூடிய சக்தியும், எளிமையாக வாழும்போதுதான் கிடைக்கும்.
எளிமையாக வாழத்தான் நமக்கு நிறையத் துணிச்சல் வேண்டும்.
அது இருந்தால் நாம் நினைத்ததை சாதிக்கலாம்.”
*****
“முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.”
*****
“யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.”
*****
“எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார்.”
*****
“மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான்
பிறக்கின்றன.”
*****