“எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ, அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது.”
*****
“தடையென தெரிந்தால் தகர்த்தெறி….
வாழ்வில் முன்னோக்கிய பயணம் முக்கியமே தவிர…
பாதை தேடுவது முக்கியமல்ல…”
*****
“உழைப்பு உடலை வலிமைப்படுத்தும்…
கஷ்டங்கள் மனதை வலிமைப்படுத்தும்…!”
*****
“தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.”
*****
“நான் தோற்றுப்போகலாம். அதன் பொருள், வெற்றி சாத்தியமற்றது என்பதல்ல.”
*****
“வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்;
1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
3.பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.”
*****