“நாம் எவருக்கேனும் நன்மை செய்தால், அதற்கு அவர்கள் நன்றி கூறவேண்டும்; அவர்களின் கண்களில் விசுவாசம் தெரியவேண்டும் என எதிர்பார்த்தால், நிச்சயம் நாம் மகிழ்ச்சியை இழந்துவிடுவோம்.
பிறருக்கு நல்லது செய்யும் நிலையில் நாம் இருப்பதற்காக மகிழ்வோமே.”
“எந்த உணவாக இருந்தாலும், உடலானது உணவை ஜீரணிக்கவேண்டும்.
மாறாக,
உடலை உணவு ஜீரணிப்பது போலான உணவுகளை தவிர்ப்பதே புத்திசாலித்தனம்.”
“மனிதனுடைய நற்குணங்களில் தனிசிறந்து விளங்குவது அடக்கம் என்பது.
கல்வி, கேள்வி, செல்வம், குலம், பட்டம், பதவி முதலிய பல இருப்பினும், அடக்கம் என்ற ஒன்று இல்லையானால் அவை சிறப்படையா.
உணவுக்கு உப்பு இன்றியமையாததுபோல் வாழ்வுக்கு அடக்கம் இன்றியமையாதது.”
“எவனுடைய திறமையும் , எவனுடைய அறிவும், எவனுடைய படிப்பும், எவனுடைய வீரமும், எவனுடைய விஞ்ஞானமும், அவனைப் பெற்ற தாய் தந்தையருக்கும் அவன் பிறந்து வளர்ந்த தாய் நாட்டுக்கும் பயன்படுகின்றனவோ, அவனே நல்ல மகன்.”
“தன்னம்பிக்கையும் தெளிவான, சரியான இலட்சியமும் ஒருவரிடம் இருக்கலாம். ஆனால் அவற்றை அடைய ஊக்கம் அவசியம் வேண்டும்.
நம்பிக்கையும் செயல்திட்டமும் சரியாக இருக்கலாம். ஊக்கம் இல்லாவிட்டால் எதையும் நிறைவேற்ற முடியாது.”