“எதையும் நாம் செய்து முடிக்க முடியும்,
எப்படிப்பட்ட சிக்கலையும் நம்மால் தெளிவாக்கிக்கொண்டுவிட முடியும்,
எப்படியும் நாம் முன்னுக்கு வந்துவிடலாம், அதற்கு வேண்டிய மூளையும் சுறுசுறுப்பும் முயற்சியும் நம்மிடம் இருக்கிறது
என்ற எண்ணமும், திடமும் இருந்தால், வாழ்க்கையில் நமக்கு வளர்ச்சியைத் தவிர, தளர்ச்சி என்பது இருக்கவே இருக்காது.”
“நாம் இன்பங்களை நாடி ஓடிக் கொண்டு இருக்கும்வரையில், துன்பங்கள் நம்மை நிழல்போல் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
துன்பங்கள் நம்மைத் துரத்தாமல் இருக்கவேண்டுமானால், நாம் இன்பங்களைத் துரத்திப்பிடிக்க ஆசைப்படக்கூடாது.
இன்பங்களின் மீது நாம் எவ்வளவுக்கு எவ்வளவு வேட்கை கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நாம் துன்பங்களை ஏற்றுக்கொள்ளவும் முன்னேற்பாட்டுடன் இருக்கவேண்டும்.”
“எல்லாத் தானங்களிலும் சிறந்த தானம் அன்னதானம் ஆகும்.
ஏனைய தானங்களால் பெறுபவருக்குத் திருப்தி ஏற்படாது. மேலும் ஆசையே ஏற்படும்.
ஆனால் சாப்பிட்டு வயிறு நிரம்பி விட்டால் திருப்தி ஏற்பட்டுவிடும். இனிப் போதும் என்று கூறிவிடுவர்.”
“கோவிலுக்கு போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி. தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி, கும்பிடாவிட்டாலும் சரி. பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால் தெய்வம் அருள் புரியும்.”