“வெற்றிக்கு மூன்று வழிகள்:
1 மற்றவரை விட அதிகம் தெரிந்து வைத்துக் கொள்
2. மற்றவரை விட அதிகமாக வேலை செய்
3 மற்றவரை விட குறைவாக எதிர்பார்”
*****
“வாழ்க்கையில் நான்கு பொருள்களை உடைத்து விடக் கூடாது.
அவை நம்பிக்கை, நட்பு, உறுதிமொழி, இதயம்.
ஏனென்றால் அவை உடையும் பொழுது சப்தம் எழுவதில்லை மாறாக வலிதான் ஏற்படும்.”
*****
“மூளை வேறு – மனம் வேறு.
மூளை எப்போதும் சுயநல நோக்கிலேயே யோசிக்கும்.
எதைச் செய்தால் நமக்கு லாபம் என்றே யோசிக்கும்.
மனம் நல்லது கெட்டதை நினைக்கச் சொல்லும்.
பிறரைப் பற்றி கவலைப்படும்.
தர்மம் அதர்மம் பற்றி யோசிக்கும்.
எனவே எதைச் செய்தாலும் -மூளை சொல்வதை
மட்டும் கேட்காமல், மனதைக் கேட்டு,
மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் செயல்பட்டால் –
நம்மால் பிறருக்கு எந்த விதத்தில் உதவியாக
இருக்க முடியும் என்று ஒரு மனிதன் யோசித்து
செயல்பட்டால் – அது அவனுக்கும் நிம்மதி,
சமுதாயத்திற்கும் பலன்.”
*****