“கோபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்துவிடுவது எளிது. ஆனால் எழும் கையை தாழ்த்தி மனதை கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல். இந்த கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும்.”
*****
” நல்ல செயலில் எப்போதும் ஈடுபடுங்கள்.
மனம் போன போக்கில் வாழக்கூடாது. சந்தோஷத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வது, கேட்பது, பேசுவது, உண்பது என்றில்லாமல், மனக்கட்டுப்பாட்டுடன் வாழுங்கள்.
ஒருவரின் மன நிறைவைப் பொறுத்தே அவரது வாழ்க்கைத்தரம் அமையும். ஆனால் ஆடம்பரத்துடன் இருப்பதையே வாழ்க்கைத்தரம் என தவறாக பலரும் நினைக்கிறார்கள்.
ஏதாவது நல்ல செயலில் எப்போதும் ஈடுபடுங்கள். இதனால் தீய எண்ணங்கள் ஏற்படுவதை தடுக்க முடியும்.”
*****
“அன்பு என்பது சொற்களில் வாழ்வதில்லை.
அன்பைச் சொற்களால் விளக்கவும் முடியாது.
செயல்களால் விளக்கம் பெறுகிறது அன்பு.”
*****