
முன்னோரின் அனுபவக் குறிப்புக்கள் பழமொழிகளாகும்.
பழமொழியை முதுமொழி என்றும் சொல்வர்.
குறிப்பிட்ட கருத்துக்களை உணர்த்துவதற்கு பழமொழிகள் உதாரணமாகக் கூறப்படுகின்றன.
சகல துறைகளிலும் தமிழ்மக்களின் வாழ்வியல் பற்றிய கருத்துக்களை பழமொழிகள் மூலம் அறியலாம்.
சுருக்கமாகச் சொல்வதும் மனதில் எளிதாக பதியுமாறு விளக்குவதும் பாமரரும் புரியக்கூடிய வகையில் தெளிவாகக் கூறுவதும் அவற்றின் சிறப்பாகும்.
வாழ்க்கை நல்வழியில் செல்ல பழமொழிகள் உறுதுணையாக இருக்கின்றன.
தமிழ் சமுதாயத்தில் இன்றும் புழக்கத்தில் உள்ள பழமொழிகள் பல அறிவுரைகளைக் கூறுகின்றன.
உதாரணமாக –
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
பேராசை பெருநட்டம்.
துணை போனாலும் பிணை போகாதே.
ஆற்றில் போட்டாலும் அளவறிந்து போடு.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
தன் கையே தனக்குதவி.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
எனக் கூறிக்கொண்டே போகலாம்.
பழமொழிகள் எமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கின்றன என்பது மிகையாகாது.
*****