பூஞ்சோலைதனிலே
தேனோடு சுகந்தம் சுமந்து
மலர்ந்திருக்கும் மலர்களோடு
பேரழகுப் பெட்டகமாய்
மலர்ந்திருக்கும் பெண்மலர்
அவளே
என்னுள் மலர்ந்தவள்…
தென்றலோடு அசைந்தாடும்
மலர்களுக்கு போட்டியாக
மென்புன்னகையில் இதழ் அசைய
வீற்றிருக்கும் பெண்ணோவியம்
அவளே
என்னுயிரானவள்…
தினம்
வருகிறேன்
பார்க்கிறேன்
ரசிக்கிறேன்
விலகிச் செல்கிறேன்
பெருமூச்சுடன்…!!!
கணப்பொழுதில்
பிறக்கிறது காதல்…
ஏனோ
பிறக்கவில்லை இன்னும்
துணிவு!!!