பொறுமையின் மறுவடிவம்
பூமித் தாயி – எங்கள்
பூமித் தாயி
உன் மடியில நாத்து நடுறோம்
பாரு தாயி – நல்லா
பாரு தாயி…
பக்குவமா காத்து விளைச்சல்
தந்திடு தாயி – மனமா
தந்திடு தாயி
வேண்டும் நேரம் மழையை துணைக்கு
அழைத்திடு தாயி – பாத்து
அழைத்திடு தாயி…
உன்மடி நிறைஞ்சா எங்க வயிறும்
நிறையும் தாயி – மனமும்
நிறையும் தாயி
அறுவடைக்கு பொங்கல் வைத்து
படைப்போம் தாயி – சிறப்பா
படைப்போம் தாயி…