சக்தி இன்றி சிவன் இல்லை
இறை நிலையில் பெண்ணின் பங்கு…
வேதகாலம் தொட்டு
நவீன காலம் வரை
அறிவில் ஆற்றலில் வீரத்தில்
மேலோங்கி நின்ற
பெண்களின் பங்கு
போற்றப்பட்டுள்ளது…
இலக்கிய புலமையில்
புகழ் பெற்ற
ஔவையார்
காரைக்கால் அம்மையார்
போன்ற பெண்கள்…
தன் கணவனுக்காக குரல் கொடுத்து
மதுரையையே எரித்தழித்த
கண்ணகி…
நாட்டை ஆட்சி செய்த
பெண்ணரசிகள்…
புலியை மறத்தால் துரத்தும்
வீரப் பெண்கள்…
வாழ்ந்த
அந்தக் காலத்தில்
வீரத்திலும் விவேகத்திலும் சிறந்து விளங்கி
அதை
செயலிலும் காட்டி
வாழ்ந்து வெற்றியடைந்திருக்கிறார்கள்
பெண்கள்…
நவீன யுகத்தில்
காலத்திற்கேற்ப
வாழ்க்கை முறைகள் மாறி
வன்முறைகள்
பாலியல் கொடுமைகள்
பெருகி
தடைகள் பல எழுந்த போதிலும்
மண்ணில் மட்டுமல்ல
விண்ணிலும்
சகல துறைகளிலும்
சாதனைகள் பல புரிந்து
யுத்தங்களில் பங்கேற்று
போர்க்கலைகளிலும்
வல்லவர்கள் என
நிரூபித்து
தம் ஆற்றலையும் வீரத்தையும்
உலகறியச் செய்து
வெற்றிநடை போடுகின்றனர்
பெண்கள்…
அன்றும் இன்றும் என்றும்
பெண்ணவள்
வீரம் மிக்கவள்
மன வலிமை பெற்றவள்
துணிவு கொண்டவள்
ஆற்றல் படைத்தவள்
நினைத்ததை சாதிக்கும்
வல்லமை உடையவள்…
தன் கடமைகளை செய்து
தன் திறமைகளை வௌிக்கொணர
பாடுபடும் பெண்ணவளை
அடக்கி ஆளாதீர்
அடிமையாக்காதீர்
போதைப்பொருளாக பார்க்காதீர்…
வற்றாத ஊற்றாக
உள்ளமது அன்பைப் பொழிய
தென்றலாக தவழ்பவளை
கதாநாயகியாக ஏற்கமுடியாதெனில்
பரவாயில்லை
சீண்டிப் பார்த்து
அவளை
அரக்க குணம் கொண்ட
வில்லியாக மாற்றாதீர்…