
பெண்ணாய் பிறந்ததில்
பெருமை கொள்வோம்
நற்பண்புகள் கொண்டு
வாழ்ந்திடுவோம்…
அன்பு பொழிந்து
கொடுத்திடுவோம்
அறம் செய்து நாமும்
மகிழ்ந்திடுவோம்…
பொறுமையை கூடவே
வைத்திருப்போம்
எச்சரிக்கை என்றும்
கடைப்பிடிப்போம்…
துஷ்டரைக் கண்டால்
விலகிடுவோம்
கயவர் நெருங்கினால்
அழித்திடுவோம்…
கல்வியில் இமயம்
தொட்டிடுவோம்
தாய்மையில் கர்வம்
கொண்டிடுவோம்…
இல்லத்தில் நிலவும்
லட்சுமி கடாட்சம்
பெண்ணாலே என
உணர்த்திடுவோம்…