இராப்பொழுதில்
வான்வௌியில் உலா வரும்
பால் நிலா
பகல்ப்பொழுதில்
மண்ணின் மடியில்
உலா வருகிறதே…!!!
காந்தமாய் இழுக்கிறதே…
விழிகள் மட்டுமல்ல
கால்களும்
அவளருகே செல்கிறதே…
சுட்டெரிக்கும் சூரியனும்
தொடமுடியாது
சுடும் காற்றும்
தழுவமுடியாது என்னை
இந்தப் பெண்ணிலா
என்னருகில்
இருக்கும்வரை!!!