சுத்தம் செய்த, எலும்பில்லாத, சிறிது சிறிதாக வெட்டிய கோழியிறைச்சி – 250 கிராம்
பெருஞ்சீரகம் (சோம்பு) – 50 கிராம்
நொறுக்கிய மிளகாய்த் தூள் (கட்ட தூள்) – 50 கிராம்
வெங்காயம் – 100 கிராம்
கட்டி தேங்காய்ப்பால் – 1 கப்
பூடு – 5 பல்
இஞ்சி – 1 துண்டு
தேசிப்பழம் – பாதி
உப்பு – தேவையானளவு
இறைச்சியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து பிரட்டி 5 நிமிடங்கள் ஊறவிடவும்.
பெரஞ்சீரகத்தை தூளாக்காமல் நொறுக்கி வைக்கவும்.
வெங்காயத்தை சிறிய சதுரங்களாக வெட்டி வைக்கவும் (சிறிய வெங்காயமென்றால் தடித்த வட்டங்களாக).
தோல் நீக்கிய இஞ்சி, பூடு நசித்து வைக்கவும்.
தேசிப்பழம் தவிர்ந்த அனைத்தையும் பாத்திரத்தில் இட்டு அகப்பையால் நன்றாக கலந்து அடுப்பில் மிதமான சூட்டில் வேக வைக்கவும். பிரட்டலாக வறண்டு வரும்வரை இடையிடையே திறந்து கிளறவும். வறண்டதும் தேசிப்பழ சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவைக்கேற்ப மிளகாய் கூட்டலாம்/குறைக்கலாம்.