பிறக்கும் குழந்தைகள்
உள்ளம் தூய்மை…
அதை பேணிக்காப்பது
பெற்றோர் கடமை…
ஒழுக்கம் பதித்து
அன்பு பொழிந்து
பண்பு வளர்ப்பது
பெற்றோர் செயல்…
கல்வி தந்து
நல் நட்பு காத்து
வெளியுலக
அறிமுகம் தருவது
பெற்றோர் பணி…
தினம் சில நிமிடங்கள்
ஒன்றுகூடி மகிழ்வது…
அன்றைய நிகழ்வுகள்
பரிமாறிக் களிப்பது…
நல்லது தீயது
பிரித்தறியப் பழக்குவது…
வீண்செலவு செய்யாது
பொறுப்பு உணர்த்தி வளர்ப்பது…
பெற்றோர் கடமை…
வழிநடத்த பெற்றோரும்
துணையாக நல் நட்பும்
இருந்துவிட்டால்
குழந்தைகள்
நாளைய நற்பிரஜைகளே…