பிறப்பது
கள்ளம் கபடமில்லா குழந்தைகள்…
அதை
மாறாது கட்டிக் காப்பது
பொறுப்பான பெற்றோர்
தூய்மையான நட்பு
சிறந்த ஆசான்…
பொறுப்பான பெற்றோரது கண்காணிப்பில்
வளரும் குழந்தைகள்
தடைகள் பல தாண்டி
வெற்றிபெறும் வாழ்வில்
ஐயமெதுவும் இன்றியே…
தூய்மையான நட்பின் துணையோடு
செல்லும் குழந்தைகள்
துயரங்களை தூசாக்கி
கரைசேரும் வாழ்வில்
நிச்சயமாகவே…
சிறந்த ஆசானின் வழிநடத்தலில்
நடக்கும் குழந்தைகள்
சிகரம் தொடும் வாழ்வில்
சத்தியமாகவே…
நல்ல நட்பை
அடையாளம் காட்டுவதும்
சிறந்த ஆசானை
பெற்றுத் தருவதும்
பெற்றோரின்
கடமையே!!!