இறைவன் தந்த வரமே!
எம் உயிரில் உதித்த மகளே!
விரைந்து வரும் புத்தாண்டு
நற்செய்திகள்
சுமந்து வரட்டும் மகிழ்வோடு…
இணைந்து வரும் நாட்கள் யாவும்
செல்வங்கள்
நிறைத்துச் செல்லட்டும் வளமோடு…
சேர்ந்து வரும் நிமிடங்கள் எல்லாம்
காதல்
தொடர்ந்து மலரட்டும் இணையோடு…
அழைத்து வரும் புது வரவு
இதயம்
நிறைத்து வளரட்டும்
சுகத்தோடு அறிவோடு பண்போடு அழகோடு…!!!