வாழும் காலம்
மகிழ்ச்சி தரும்
அகத்தே
திருப்தி இருந்திட்டால்…
புறத்தே
அன்பு விதைத்திட்டால்…
முளைக்கும்
பேராசை அழித்திட்டால்…
அரும்பும்
பொறாமை புதைத்திட்டால்…
உழைப்பில்
உண்மை புகுந்திட்டால்…
நடத்தையில்
பண்பு இணைந்திட்டால்…
தோல்வியில்
சிலிர்த்து எழுந்திட்டால்…
வெற்றியில்
நம்பிக்கை வைத்திட்டால்…