அன்பு மலர்களை
மலரச்செய்வோம் உள்ளத்தில்
கோபங்களை புதைத்து உரமாக்கி…
நலிந்தவர்க்கு உதவி செய்ய
நீட்டுவோம் கரங்களை
பலனை எதிர்பாராது…
பொறுமையின் கை பிடித்து
பயணிப்போம் நேர்வழியில்
பாதை மாற்றாது…
திருப்திக் கடலில் மூழ்கி
அழித்திடுவோம் பேராசை தீயை
அழிவிலிருந்து மீண்டிட…
மகிழ்ச்சியின் ஊற்றாகும்
வாழ்க்கை…!!!
நிம்மதி குடியேறும்
வாழ்வில்!!!