அன்புடன் பண்பும் வேண்டும்
பணிவுடன் அடக்கமும் வேண்டும்
உழைப்புடன் நேர்மையும் வேண்டும்
முயற்சியுடன் ஊக்கமும் வேண்டும்
துணிவுடன் தன்னம்பிக்கையும் வேண்டும்
திருப்தியுடன் பொறுமையும் வேண்டும்
வீரத்துடன் விவேகமும் வேண்டும்
பக்தியுடன் மனஅமைதியும் வேண்டும்
சிகரம் தொடும்
மகிழ்வான வாழ்க்கைக்கு…