மரவள்ளி கஞ்சி
மரவள்ளிக் கிழங்கு – 1 கிலோ
தேங்காய்ப் பால் – 1 கப்
சீனி (sugar) – 1 கப்
உப்பு தேவையான அளவு.
மரவள்ளிக் கிழங்கை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கிழங்குடன் அதற்கு சிறிது மேலாக நிற்குமளவு நீர் விட்டு உப்பும் சேர்த்து வேக விடவும்.
கிழங்கு வெந்ததும் அதனுடன் தேங்காய்ப்பால், சீனி சேர்த்து தேவையான அளவு வற்றும் வரை அடுப்பில் வைத்து இறக்கவும்.
மரவள்ளி பொரியல்
சுத்தம்செய்த மரவள்ளிக் கிழங்கை கிட்டத்தட்ட 1 அங்குல நீளம், அகலம், உயரத்தில் வெட்டவும். அதற்கு தேவையான அளவு உப்பு, தூள் சேர்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
மரவள்ளிக் கிழங்கு பால்க்கறி
மரவள்ளிக் கிழங்கு – 1/2 கிலோ
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் பெரியது – 3
கறிவேப்பிலை – 1 இணுக்கு
தேங்காய்ப் பால் – 1/4 கப்
மஞ்சள் தூள் சிறிதளவு
உப்பு, புளி தேவையான அளவு
மரவள்ளிக் கிழங்கை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கிழங்குடன் நீர் சேர்த்து சிறிது உப்பு, மஞ்சள் தூள், சிறிதாக நறுக்கிய வெங்காயம், நீளமாக கீறிய பச்சை மிளகாய் சேர்த்து கிழங்கை வேக விடவும்.
கிழங்கு வெந்ததும் அதனுடன் தேங்காய்ப்பால், உப்பு, புளி, கறிவேப்பிலை சேர்த்து கிளறி தேவையான அளவு பதத்தில் இறக்கவும்.
மரவள்ளித் துவையல்
மரவள்ளிக் கிழங்கு – 1 கிலோ
சிறிதாக நறுக்கிய வெங்காயம் – 1 கப்
சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1/4 கப்
தேங்காய் துருவல் – 2 கப்
உப்பு, புளி தேவையான அளவு
சுத்தம் செய்து வேக வைத்து வேர் நீக்கிய மரவள்ளிக் கிழங்குடன் மிகுதி பொருட்களை சேர்த்து மசித்தோ அல்லது இடித்தோ ஒன்றாக சேர்க்கவும். சேர்வையை உருண்டைகளாகப் பிடித்து காலை உணவாக உண்ணலாம்.