நிலமங்கை காத்திருக்கிறாள்…
பருவகாலத்தில் வரும்
ஆருயிர் கணவன் வரவில்லை…
பசியாற்ற வழியேது…
இருந்த உணவும் முடிகிறது…
குழந்தைகளோ
வாடி வதங்கி பசியுடன் தலைகுனிந்து
தாயைப் பார்க்கின்றன…
வேதனையில் மேனி வெடித்து
நிறம் மாறி ஏக்கத்துடன்
வானத்தைப் பார்த்திருக்கிறாள்
நிலமங்கை…
திடீரென வந்தது மின் அஞ்சல்…
வந்து கொண்டிருக்கிறேன் கண்ணே
கவலை வேண்டாம்…
ஆவலுடன் பார்த்தபோது
இடியென கதவைத் திறந்து
வந்துவிட்டான் மழைக் கணவன்…
நாணத்தில் கண்மூடி இருந்தவளை
அணைத்துக்கொண்டான் நறுமணத்துடன்
பசியாறிய குழந்தைகள்
ஆடிப்பாடின மகிழ்வுடன்…