கள்வனே!
கன்னம் வைத்து புகுந்துவிட்டாய்
யாரும் அறியாமலே…
போராடி கொன்றுவிட்டாய்
தனிமையை
துணையாக விட்டுச் சென்றாய்
இனிமையை…
உணர்வுகள்
உன்னை ஏற்றுக்கொள்ள
கள்ளியாக்கிவிட்டாய்
என்னையும்!!!
திருடனே!
அமுதமாய் கலந்து
என் நினைவுகள் நீயாகி
வில்லனானாய்…
உயிருடன் இணைந்து
என் கனவுகள் நீயாகி
காதலனானாய்…
உணர்வுகளால் கட்டுண்டு
என்னுள்ளே ஒளிந்திருந்து
திருடியாக்கிவிட்டாய்
என்னையும்!!!