தேவையான பொருட்கள்
புளி கரைசல் – 3 கப்
மிளகு தூள் – 1 தே. கரண்டி
நற்சீரகத் தூள் (சின்ன சீரகம்) – ½ தே. கரண்டி
மல்லித் தூள் – 1 மேசைக் கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
பூண்டு – 1 (தட்டி வைக்கவும்)
உப்பு – தேவையான அளவு
முடக்கத்தான் கீரை தண்டுடன் – 1 பிடி (சுத்தம் செய்து சிறிதாக வெட்டவும்)
செத்தல் மிளகாய் – 3 (நொறுக்கியது)
செய்முறை:
மேற்கூறிய யாவையும் ஒன்று சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.
முடக்கத்தான் ரசம் தயார்!!!!!!
சாதத்துடனும் சாப்பிடலாம். சாப்பாட்டின் பின்னும் அருந்தலாம்.
மூட்டுவலி, கை கால் வலி, முதுகு வலி, உடம்பு வலி போன்ற வலிகளுக்கு முடக்கத்தான் கீரை சிறந்த பலன் தரும்.