முருங்கைக்காய் – 250 கிராம்
வெங்காயம் – 50 கிராம்
பூடு – 3 பல்
கட்டி தேங்காய் பால் – 1/2 கப்
மசாலா தூள் (மிளகாய், மல்லி கலந்த தூள்) – 2 மேசைக் கரண்டி
கரைத்த கட்டிப் புளி – 3 மேசைக் கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் (சோம்பு) – 2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை
முருங்கைக்காயின் தோல் நீக்கி, கழுவி, 2 அங்குலம் அளவு நீளமாக வெட்டி அதை நீள் பக்கமாக பாதியாக்கி வைக்கவும்.
சுத்தம் செய்த வெங்காயம், பூடு சிறிது சிறிதாக வெட்டி வைக்கவும்,
சட்டியில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடாகியதும் முருங்கைக்காய் துண்டுகளை போட்டு சிறிது பொன்னிறமாக வரும்வரை கிளறவும். அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். முருங்கைக்காய் துண்டுகளின் நிறம் மாறியதும் வெங்காயம் பூடு சேர்த்து இரண்டு, மூன்று முறை விட்டு விட்டு கிளறியதும் வெந்தயம் சேர்த்து ஒரு முறை கிளறியதும் பெருஞ்சீரகம் சேர்த்து ஒரு முறை கிளறியதும் கறிவேப்பிலை சேர்த்து ஒரு முறை கிளறியதும் தேங்காய்ப் பால், தூள், புளி, உப்பு சேர்த்து கலந்து மூடி கொதிக்க வைக்கவும். கொதித்து பச்சைத் தூள் மணம் போனதும் கிளறி ஓரளவு வறண்டு வந்ததும் இறக்கவும்.
*****