ரவை – 1 கப்
சீனி (sugar) – 1/2 கப்
பட்டர்/நெய் – 3 மேசைக் கரண்டி
பால் – 1/8 கப்
தேவையான அளவு முந்திரிகை வத்தல், வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை (மிகவும் சிறிது சிறிதாக நறுக்கியது), ஏலக்காய் பொடி
தாச்சியில் 1 மேசைக்கரண்டி பட்டர்/நெய்யுடன் முந்திரிகை வத்தல், நறுக்கிய நிலக்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்தெடுத்து வைக்கவும்.
மிகுதி பட்டர்/நெய்யுடன் அதே தாச்சியில் ரவை சேர்த்து வறுக்கவும். ரவை பொன்னிறமாக வருவதற்கு முன் சீனி சேர்த்து வறுத்து கலவை திரண்டு வரும்போது அடுப்பை நன்றாக குறைத்து வைத்து ஏலக்காய் பொடி, வறுத்து வைத்த முந்திரிகை வத்தல், நிலக்கடலையை சேர்த்து இரு முறை கிளறியதும் பாலை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும். கலவை, உருண்டையாக பிடிக்கும் பதம் வந்ததும் இறக்கி சூட்டுடனேயே உருண்டைகளாகப் பிடிக்கவும்.
பெரிய அளவில் செய்யும்போது உருண்டைகளாக பிடிக்கும்போது கலவை காய்ந்து உதிர்ந்தால் பால் மீதமிருந்தால் பாலை அல்லது நீர் சிறிதளவு சேர்த்து கிளறி பிடிக்கவும்.