புதிய இதழ்கள் விரிந்திடவே
மலர்ந்து சுகந்தம் வீசிடவே
தேன் துளிகள் சிந்திடவே
விரைந்து வரும் புத்தாண்டே!
புதுமைகள் பல படைத்திடவே
பழமைகள் யாவும் பேணிடவே
கொடுமைகள் அழித்து ஒழித்திடவே
அமைதி நிலை நாட்டிடவே
விண்ணில்
புதிய சரிதம் எழுதிடவே
மண்ணில்
பச்சை வண்ணம் தீட்டிடவே
மனதில்
நல்லெண்ணம் விதைத்திடவே
செயலில்
சூழல் காத்திடவே
அநாதை முதியோர் இல்லங்கள்
கருணை வௌ்ளத்தில் புதைத்திடவே
இயற்கையோடிணைந்து கைகோர்த்து
பிரபஞ்சம்தனை அழகாக்கிடவே
வாழ்த்தி வரவேற்கிறது
பூவுலகம்…