முத்தின இதழ்கள் பிரித்தெடுக்கப்பட்ட வாழைப்பூ – 1
தேங்காய்த் துருவல் – 1 கப்
சிறிதாக நறுக்கிய வெங்காயம் – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 3
மஞ்சள் தூள் – சிறிதளவு
பெரிய சீரகம் – 1 மேசைக்கரண்டி
தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
உப்பு கலந்த நீரில் வாழைப்பூவை சிறிது சிறிதாக நறுக்கி போடவும். தேவையான பொருட்கள் ஆயத்தமானதும் வாழைப்பூவை நீரில்லாமல் பிழிந்து வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கொதித்ததும் சிறிதாக நறுக்கிய காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து வதங்கும்வரை கிளறவும். வதங்கியதும் பெருஞ்சீரகம் சேர்த்து இரு முறை கிளறியதும் வாழைப்பூ, தேங்காய் துருவல், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வறண்டு வரும்வரை கிளறி இறக்கவும்.