
துன்பங்களையும் தோல்விகளையும்
தந்தாலும்
இன்பங்களையும் வெற்றிகளையும்
தர மறக்காத
ஆண்டே!
புதிய புதிய வடிவங்களில்
கொடுமைகளையும்
சீற்றம் கொண்ட
இயற்கையையும்
காட்டிச் செல்லும்
ஆண்டே!
வாழ்த்திச் செல்
புத்தாண்டை…!!!
மக்கள் மனதினிலே
பொன்னாசை பெண்ணாசை
மண்ணாசை பதவியாசை
வேரோடு அழிந்திட
அன்பும் நல்லெண்ணங்களும்
ஊற்றெடுத்து ஓடிட
வழிசமைத்திடு
என
வாழ்த்திச் செல்!!!