மனம்
கட்டுக்குள் இருந்திட்டால்
பேராசை அழிந்து
பொறாமை மடிந்து
திருப்தி நிலவிடும்
வாழ்வில் நிம்மதி வந்திடும்…
உள்ளம்
தூய்மையாய் இருந்திட்டால்
கள்ளம் கபடம் நுழையாது
பொய் களவு தோன்றாது
அன்பும் பண்பும் பெருகிடும்
நல்லெண்ணங்கள் உருவாகிடும்
வாழ்வு மலர்ந்து நறுமணம் வீசும்…