நலம் விசாரிக்கும்
காற்றை
காணவில்லை…
தழுவிச் செல்லும்
தென்றலையும்
காணவில்லை…
ஆதவன்
கடத்திச் சென்றானோ…
மரம் செடி கொடிகளுள்
சிறை வைத்தானோ…
புழுங்கித் தவிக்கும்
மாந்தரின்
துயர் துடைக்க
விடுதலை செய்திடு
சூரியனே!
நீயும் சற்றே விலகி
துரத்தே நின்றிடு
கதிரவனே!!!