
முட்டாளாகிறாள் பெண்…
காதல் பூசிய வார்த்தைகள் சிந்தி
கவர்ந்து காரியம் முடித்த கயவன்
வேஷம் கலைத்து செல்லும்போது!!!
விழித்திடு பெண்ணே!
இன்றைய சூழலுக்கு
உகந்ததல்ல
கண்டதும் காதல்…
காதல் உன்னை நெருங்கும்போது
சிந்தித்து செயற்படு…
அழைத்துச் செல்லும் இடம்
பூந்தோட்டமா புதைகுழியா…!!!
ஆராய்ந்து இறங்கிடு!!!