வான்மகளை
முத்தமிட்டு சிவக்கச் செய்து
கதிரவன் மறைந்திட…
கரும் போர்வை போர்த்தி
பூமகள் உறங்கிட…
வெண்திரை விலக்கி மெல்ல
வெண்ணிலா பார்த்திட…
குழந்தைகளுக்கு
பிடித்துத் தருவதாக வாக்களித்து
உணவூட்டி மகிழும்
அன்னையர்…!!!
அழகிலே வியந்து
விழிகளால் சிறைப் பிடித்து
கவிதைகள் புனையும்
கவிஞர்கள்…!!!
காதல் சொல்ல
தூது செல்ல வேண்டியே
கடிதங்கள் வரையும்
காதலர்கள்…!!!
இன்புற்று
முழு முகம் காட்டி
பெருமையுடன் உலா வருகிறாள்
வெண்ணிலா
தோழியருடன்!!!