அழகும் அறிவும்
இருந்தால் மட்டும் போதாது
கூடவே
தன்னடக்கமும் இருந்திட வேண்டும்…
பட்டமும் பதவியும்
இருந்தால் மட்டும் போதாது
கூடவே
பண்பும் இருந்திட வேண்டும்…
சொத்தும் பணமும்
இருந்தால் மட்டும் போதாது
கூடவே
இரக்கமும் இருந்திட வேண்டும்…
உழைப்பும் வருமானமும்
இருந்தால் மட்டும் போதாது
கூடவே
நேர்மையும் இருந்திட வேண்டும்…
வாழ்வில்
வெற்றி பெற…!!!