தகுதியை மீறிய
ஆடம்பரம் வேண்டாம்…
தேவையை மீறிய
பேராசையும் வேண்டாம்…
அளவை மீறிய
பணம் வேண்டாம்…
எல்லை மீறிய
சொத்தும் வேண்டாம்…
இவற்றின் பயனாய்
துயரம் வேண்டாம்…
யாவையும் இழக்க
பிணியும் வேண்டாம்…
நேர்வழியில் உழைத்து
வளமாக வாழ்வோம்…
தேவைக்கு மிஞ்சியதை
தான தர்மம் செய்வோம்…