கிட்டாத பொருளில்
வைக்காதீர் ஆசை…
அது
அழைத்துச் செல்லும்
எம்மை
தகாத வழியில்…
முடிவில் கிடைப்பது
தோல்வியும் துன்பமுமே…
அடுத்தவரை பார்த்து
கொள்ளாதீர் பொறாமை…
அதில்
பற்றிடும் தீ
அழித்திடும்
எம்
நிம்மதி…
அவசரப்பட்டு
கடும் சினம் கொள்ளாதீர்
சுடு சொல் எறியாதீர்…
மீளப்பெற முடியாமல்
கலங்கிடுவோம் தவித்திடுவோம்
உண்மையை உணர்கையில்…