கவிதைகளின் நாயகி
வெள்ளி நிலா
உருக்குலைந்து
காணாமல் போவதேன்…!!!
மிதந்து செல்லும்
மேகங்கள்
தழுவித் தழுவிச் செல்வதாலோ!!!
சுட்டெரிக்கும் கரங்கள் நீட்டி
கதிரவன்
துரத்தித் துரத்திச் செல்வதாலோ!!!
மண்ணிலிருக்கும்
மாந்தர் விழிகள்
தொட்டுத் தொட்டுச் செல்வதாலோ!!!