பெண்மைக்குள் தாய்மை வைத்து
தாய்மையில் உயிர்ப்பை வைத்து
அழகாய் மலர்கிறது உலகம்…
அன்பின் ஊற்றாய்
இரக்கத்தின் வடிவமாய்
பொறுமையின் சிகரமாய்
மென்மையின் பிறப்பிடமாய்
உருவானவள் பெண்…
அன்று
இல்லத்தரசியாய் வீற்றிருந்து
கணவனின் வருமானத்துள்
இனிதே
இல்லறம் நடத்தியவள்
இன்று
ஆணுக்கு நிகராய்
அவனிலும் மேலாய்
உயரப் பறக்கிறாள்
சாதனைகள் புரிகிறாள்…
இவை மட்டுமா…
மரித்து உயிர்க்கிறாள்
புது உயிரை தந்து…
பாதுகாத்து வளர்க்கிறாள்
கண்ணுக்குள் வைத்து…
சீண்டினால்
புயலாய் வீசவும்
எரிமலையாய் வெடிக்கவும்
சுனாமியாய் பாயவும்
அவளால் முடியும்…
தாய்மையை உள்ளே வைத்து
தாயாய் தாரமாய்
சகோதரியாய் மகளாய்
தோழியாய்
பரிமாணங்கள் பல எடுப்பவள்
பிரபஞ்சத்தையும் பார்த்தவள்
இல்லத்தின் குலவிளக்காய் திகழ்பவள்
குடும்பத்தின் அச்சாணியாய் வாழ்பவள்
உயிர்ப்புடன் உலகம் இயங்க
உயிர்களை தருபவள்
பெண்…
பெண்ணாய் பிறந்ததில்
பெருமை கொண்டு
பெண்மையை வாழ்த்தி
வணங்குகிறேன்…