கண்டிப்பும் கனிவும் தந்து
புகட்டினீர் பாடங்கள் எமக்கு…
ஒழுக்கத்துடன் நேர்வழியில் வாழ்ந்து
காட்டினீர் வாழ நல்வழி எமக்கு…
கல்விதனில் வெற்றி பெற்றிடவே
தந்தீர் சிறந்த ஊக்கமதை எமக்கு…
தொழில் வாய்ப்பினை பெற்றிடவே
வழங்கினீர் தக்க ஆலோசனை எமக்கு…
அதிக நேரம் உழைப்பிலும் மிகுதி நேரம் வழிநடத்தலிலும்
வாழ்ந்தீர் தந்தையே தன்னலமின்றி எமக்காகவே…
மனம்போல் மாங்கல்யம் பெற்றிட
சமைத்தீர் வழி எமக்கு…
நல்லாசிகள் ஆலோசனைகள் இன்றும்
வழங்குகின்றீர் நீர் எமக்கு…
பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள் பார்த்தாலும்
சிந்திக்கின்றீர் எம்மை சிறு பிள்ளைகளாக…
சரியான பாதையில் வாழ்க்கைப்படகு சீராகச் செல்வதற்கு
வாழ்கின்றீர் கலங்கரைவிளக்கமாக எம் குடும்பத்திற்காக…
எம் அன்புத் தந்தையே நீர்
கடவுள் தந்த பரிசு எமக்கு…