“எங்கே சென்றாலும் இறைவன் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் செல்லுங்கள்.
எந்த வேலையைச் செய்தாலும் இறைவன் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் செய்யுங்கள்.
நீங்கள் உண்மையின் பாதையில் உறுதியாகச் சென்றால்தான் கடவுள் மேல் நம்பிக்கை, கடின உழைப்பின் மேல் நம்பிக்கை முதலியன பிறக்கும்.
அந்த நம்பிக்கையே எப்போதும் பாதுகாக்கும்.”
*****
“உங்கள் நம்பிக்கையை ஜோதிடர்களிடம் வீணாக்காதீர்கள்.
உங்களது எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டியது நீங்கள்தான்.
ஜோதிடர்கள் அல்ல.
உங்களுக்கு உண்மையாக எப்போதும் இருங்கள்.
உங்கள் கனவுகளுக்கும், இலட்சியங்களுக்கும் உண்மையாக இருங்கள்.
உண்மையிடம், நேர்மையிடம், இறைவனிடம் உங்களை முழுமையாக ஒப்படையுங்கள்.
மகிழ்ச்சியான எதிர்காலம் உங்களுக்காக காத்திருப்பதை அறியலாம்.
எனவே, உங்களது எதிர்காலத்தை உங்களது சிந்தனை, நம்பிக்கை மூலம் நீங்களே தீர்மானியுங்கள்.”
*****
“அறிவாளி எதிரியாகினும் அவனுடைய ஆலோசனையைக் கேளுங்கள்.
முட்டாள் நண்பனாக இருந்தாலும் அவன் அறிவுரைகளைக் கேட்காதீர்கள்.”
*****