கோதுமை மா – 2 கப்
தேங்காய்த் துருவல் – 1 கப்
சீனி (sugar) -1 கப்
கனிந்த வாழைப்பழம் – 1
உப்பு – சிறிதளவு
தேங்காய் எண்ணெய்
செய்முறை – மா, தேங்காய்த் துருவல், சீனி, உப்பு , இவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும். பின்பு இந்த கலவையில் வாழைப்பழத்தை நசித்து சேர்த்து பிசைந்து தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து றொட்டி பதம் வரும்வரை குழைக்கவும். தண்ணீர் சிறிது கூடினாலும் பதம் பிழைத்துவிடும். குழைத்ததும் உடனடியாக உருண்டைகளாக பிடித்து றொட்டிகளாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். குழைத்த மா ஈரப்பதமாக இருந்தால் சிறிது பச்சை மா ஒரு சிறு பாத்திரத்தில் வைத்து அதில் உருண்டைகளை பிரட்டி எடுத்து தட்டலாம்.
எண்ணெய் விருப்பமில்லாவிட்டால் தோசைக்கல்லில் போட்டு எடுக்கலாம்.
காலை உணவாக உண்ணலாம்.