“உங்களைப் பற்றி மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் நினைக்கட்டும்.
ஆனால், நீங்கள் உங்களை முதல்தரமான மனிதனாகவே மதியுங்கள்.
ஒழுக்கம், அறிவு, நேர்மை, விடாமுயற்சி ஆகிய நான்கு பண்புகளையும் விடாப்பிடியாகப் பின்பற்றி உங்களைச் சிறந்த மனிதனாக உருவாக்கிக் கொள்ளுங்கள்.”
*****
‘வெற்றி என்பது நீ பெற்றுக் கொள்வது…
தோல்வி என்பது நீ கற்றுக் கொள்வது.
ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக சிலவற்றை கற்றுக் கொள்வது தவறில்லை.
தோல்விகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.’
*****
“ஒரு கதவு மூடப்பட்டால், இன்னொரு கதவு திறக்கப்படும். வாய்ப்புகளும் அப்படித்தான்.
மூடப்பட்ட கதவையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருப்பதால் நமக்காகத் திறக்கக் காத்திருக்கும் இன்னொரு கதவை நாம் தட்டுவதே இல்லை.
புதிய வாய்ப்புகளை தேடிப் பிடியுங்கள்.”
*****