கத்தரிக்காய் – 1
வாழைக்காய் – 1
பூசணிக்காய் – 100 கிராம்
பயித்தங்காய் – 100 கிராம்
மரவள்ளிக்கிழங்கு – 100 கிராம்
உருளைக்கிழங்கு – 1
தக்காளிப்பழம் – 2
மைசூர் பருப்பு – 100 கிராம்
பெரிய வெங்காயம் – 1
பூடு பெரியது – 3 பல்
மிளகு தூள் – 1 teaspoon
மிளகாய்த் தூள், மசாலாத் தூள், உப்பு – தேவையான அளவு
தேங்காய்ப்பால் – 2 கப்
காய் வகைகளையும் கிழங்குகளையும், தக்காளிப்பழம்,வெங்காயத்தையும் சுத்தம்செய்து சிறிதாக நறுக்கி, கழுவிவைத்த மைசூர்பருப்புடன் சேர்த்து அளவான நீருடன் உப்பும் சேர்த்து வேக வைக்கவும்.
வெந்ததும் அதனுடன் தேங்காய்ப்பால், தூள் வகைகள், தட்டி நசித்து வைத்த பூடு, அளவான உப்பு சேர்த்து கொதிக்க வைத்து தேவையான பதத்தில் சாம்பாரை இறக்கி சாதத்துடன் பறிமாறவும்.
தக்காளிப்பழம் சேர்ப்பதால் புளி அவசியமில்லை.
இது எண்ணெய் சேர்க்காத சாம்பார்.
விரும்பினால், வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை இவற்றை சிறிது சிறிதாக நறுக்கி கடுகு, பெருஞ்சீரகம் சேர்த்து சிறிதளவு எண்ணெயில் இவற்றை தாளித்து சாம்பாரில் கொட்டி கிளறினால் சுவை கூடும்.