வறுத்த சிவப்பு அரிசி மா – 1 கப்
தேங்காய்ப் பால் – 4 கப்
துருவிய வெல்லம் – 150 கிராம்
வறுத்த பயத்தம் பருப்பு – 1/4 கப்
சிறிதாக நறுக்கிய தேங்காய்ச் சொட்டு – கைப்பிடி அளவு
உப்பு – தேவையான அளவு
ஏலக்காய் – 4
வறுத்த பயத்தம் பருப்பை வேக வைத்து வைக்கவும்.
ஏலக்காயை தூளாக்கி வைக்கவும்.
தேங்காய்ப் பாலை ஒரு பாத்திரத்தில் இட்டு அதில் அரிசி மா, வெல்லம் சேர்த்து நன்றாக கலக்கவும். அதில் அவித்த பயத்தம் பருப்பு, தேங்காய்ச் சொட்டு, ஏலக்காய், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, கலவை சிறிது தடிப்பாக வரும் வரை கலக்கி இறக்கவும்.
குறிப்ப- இக் கலவையுடன் 1 தே.கரண்டி மிளகு தூள் சேர்த்தால் சுவை வித்தியாசமாக இருக்கும்.