வறுத்த தீட்டல்பச்சையரிசி மா – 1 கப்
தேங்காய்ப் பால் – 2 கப்
சர்க்கரை (sugar) – 1/2 கப்
உப்பு தேவையான அளவு
அரிசி மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நீர் விட்டு கிளறி புட்டாக கொத்தி இட்டலிச்சட்டியில் வேகவைத்து வைக்கவும்.
தேங்காய்ப்பாலுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கொதித்ததும் வேக வைத்த புட்டை சேர்த்து கிளறி வறண்டு விடாமல் இறக்கி பரிமாறவும்.
எண்ணெய் புட்டு என்றும் இதை சொல்வார்கள்.
காலை உணவாக உண்போம்.