பூவுலகில் மலர்ந்திருக்கும்
கோடானுகோடி மலர்களது
அழகைவிட
பேரழகு
கண்ணா!
உனது
மழலைச் சிரிப்பழகு!!!
கவலைகளெல்லாம் கரைகின்றன
துன்பங்களெல்லாம் மறைகின்றன
பிணிகளெல்லாம் அழிகின்றன
கண்ணா!
உனது
மழலைச் சிரிப்பழகில்!!!
என்னையே மறக்கின்றேன்
உன்னையே நினைக்கின்றேன்
உனக்காகவே வாழ்வதாய்
எண்ணியே களிக்கின்றேன்
கண்ணா!
உனது
மழலைச் சிரிப்பழகால்!!!