“காயப்படுத்த பலர் இருந்தாலும்
மருந்தாக சிலர் இருப்பதாலேயே
நம் வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது “
*****
“மனம் திறந்து பேசுங்கள்
ஆனால்
மனதில் பட்டதெல்லாம் பேசாதீர்கள்
சிலர் புரிந்துகொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வார்கள்.”
*****
“பேசிவிட்ட வார்த்தை
தொடுத்துவிட்ட அம்பு
கடந்துவிட்ட காலம்
இழந்துவிட்ட வாய்ப்பு
இந்த நான்கையும் திரும்பப்பெற முடியாது.”
*****
“நீங்கள் எப்படி வளர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ
அப்படி உங்கள் குழந்தைகளை வளருங்கள்.”
*****
“பறந்து செல்வதற்கு இறக்கைகள் முளைக்கும் என்று காத்திருக்காதே
கால்கள் இருக்கின்றன, களைப்பின்றி ஓடு.”
*****